- 17 October, 2025
வத்திக்கான் | அக்டோபர் 14, 2025:
மறைபரப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இறைப் பணியாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வண்ணமாக, 19 அக்டோபர் 2025 அன்று கொண்டாடப்படும் உலக மறைபரப்பு ஞாயிறு கொண்டாட்டத்தில் அனைத்து கத்தோலிக்க பங்குகளும் பங்கு பெற வேண்டும் என திருத்தந்தை லியோ அழைப்பு விடுத்திருக்கிறார்.
"ஒவ்வொரு வருடமும் 'இறை மக்களிடையே நம்பிக்கையைப் பரப்பும் மறைபரப்பு பணியாளர்கள்' என்ற தலைப்பில் கொண்டாடப்படும் இந்நிகழ்வு, அனைத்து உலக திருச்சபையை, இறை வேண்டலிலும், தாராள மனத்திலும் ஒன்றிணைக்கின்றது. அனைத்து பங்கு மக்களும் இதில் இணைந்து இறை வேண்டுதலிலும் தாராள பங்களிப்பும் ஈந்து, ஈடுபட அனைவரையும் ஊக்குவிக்கின்றது. இந்த முயற்சி உலகளாவிய, மேய்ப்புப்பணி, கல்விப் பணி மற்றும் சுகாதார செயல்பாடுகளை உள்ளடக்கிய மறை பரப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற ஏதுவாக அமைந்துள்ளது.”
திருத்தந்தையின் செயல்பாட்டுக்கான அழைப்பு
தனது காணொளி செய்தியில் திருத்தந்தை லியோ “உலகில் உள்ள ஒவ்வொரு கத்தோலிக்க பங்கினையும் உலக மறைபரப்பு ஞாயிறு கொண்டாட்டத்தில் பங்கு பெற நான் வலியுறுத்துகின்றேன்” என்றார். பெரு நாட்டிலே தான் மறைபரப்பு குருவாகவும் ஆயராகவும் இருந்த காலத்தை நினைவுறுத்தி அவர், “எவ்வாறு நம் இறை நம்பிக்கையும் இறை வேண்டலும் மக்களின் தாராள மனமும், உலக மறைபரப்பு ஞாயிறு கொண்டாட்டத்தின் மூலம், ஒரு சமூகத்தையே மாற்றி அமைக்க முடியும் என்பதை நானே நேரடியாகக் கண்டேன். உங்களது ஜெபங்களும், உதவியும், மறைபரப்பு பணி பகுதியில் வாழும் நமது சகோதர சகோதரிகளுக்கு நற்செய்தியைப் பரப்பவும் மேலும் மீட்பு பணி, மேய்ப்புப்பணி மறைக்கல்வி செயல்பாடுகளுக்கும், புதிய ஆலயங்களை கட்டி எழுப்பவும் சுகாதார மற்றும் கல்வி தேவைகளை சந்திக்கவும் உதவுகின்றது ."
மறைபரப்புப் பணியும் நன்றியும் நமது திருமுழுக்கின் போது நமக்கு தரப்பட்ட அழைப்பை வலியுறுத்தி திருத்தந்தை லியோ கூறும் பொழுது "வரும் அக்டோபர் 19 அன்று நமது திருமுழுக்கின் போது நமக்கு கொடுக்கப்பட்ட, 'உலக மக்களிடம் நம்பிக்கையை பரப்பும் பணியாளர்களாக' என்ற அழைப்புக்கு இணங்க, உலகின் கடை எல்லை வரை இயேசு கிறிஸ்து என்னும் நம்பிக்கையை கொண்டு சேர்க்கும் இனிமையான, மகிழ்ச்சியான, பணியை செய்ய நம்மையே மீண்டும் அர்ப்பணிப்போம்' என்றார்.
இறுதியாக அவர் கத்தோலிக்கப் பங்குகளுக்கு, அவர்கள் செய்யும் உதவிகளுக்காக நன்றி தெரிவித்து, தனது ஆசீரை அளித்து, உலகளாவிய மறை பரப்புப்பணியில் திருச்சபையின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்
மூலம்: வத்திக்கான் செய்திகள்
படம்: TheWay.ie
© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP