- 17 October, 2025
சென்னை | அக்டோபர் 16, 2025:
சென்னை மயிலை உயர் மறைமாவட்டம் முத்தமிழ் நகர் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
உயிருள்ள வார்த்தைகளின் உயிரோட்டமான வாழ்வியலை உணர்வுப்பூர்வமாய் பங்கின் மறைக்கல்வி மாணவர்கள் நடித்து காட்டினர்.
விவிலிய பூங்காவின் மலர்மணம் நுகர தயாராக இருந்த பங்கின் மக்களையும் , நடித்து காட்ட தயாரக இருந்த மாணவர்களையும் பங்குத் தந்தை Y.S ஆரோக்கிய ராஜ் அவர்களின் ஜெபத்துடனும் , ஆசிர்வதிக்க கண்காட்சியானது இனிதே ஆரம்பமானது.
விவிலிய கண்காட்சியின் மையக்கருத்து “ நம்மை நாமே ஆய்ந்து அறிதல்.”
எழுத்துக்களாய் மின்னுகின்ற ஆண்டவருடைய வார்த்தைகளை நிகழ்காலத்திற்கு ஏற்றார்போல தத்ரூபமாக நடித்து காட்டினார்கள். வெள்ளப் பெருக்கில் நோவா காப்பற்றப்பட்டது , பவுலின் மனமாற்றம், சாலமோனின் ஞானம் , ரூத் நகோமி, திருக்குடும்பம், யோபு, தானியேலின் சிங்கக் குகை, நல்லசமாரியன் மற்றும் திருவெளிப்பாடு முழுவதும் நடித்துக் காட்டினர்.
இதில் இருக்கும் அனைத்து பகுதிகளையும் நடப்பு ஆண்டான 2025 ல் நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் , நமது வாழ்கை முறை கடவுளின் அழைப்புக்கு உகந்த வண்ணம் உள்ளதா, ஏழை பணக்காரன் வேறுபாடு, நீதியை புரட்டுதல், குடும்பங்களின் ஐக்கியம் , ஜெபத்திற்கு முக்கியத்துவம், மற்றவர்களுக்கு உதவுதல், கடைசி நாட்கள் என இந்த காலத்திற்கு ஏற்றாற்போல நடித்து காட்டினார்கள்.
இந்த புதிய முயற்சி பங்கு மக்களிடையே வெகுவான பாரட்டுகளை பெற்றுத் தந்தது. விவிலிய கண்காட்சியை ஒருங்கிணைத்து வழிநடத்திய அருட்சகோதரர் ரெக்ஸ் மற்றும் மறைக்கல்வி ஆசிரியர்களை, பங்குதந்தையும், பங்குமக்களும் மனமாற வாழ்தினார்கள்.
செய்தியாளர்: ஜீலி பெலிக்ஸ்
© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP