- 17 October, 2025
ஓசூர் | அக்டோபர் 16, 2025:
கடந்த 12ம் தேதி தர்மபுரி மறைமாவட்டம், ஓசூர் சிப்காட், புனித லூர்து அன்னை ஆலயப் பங்கின் பாரதி நகர் பகுதி புனித பாத்திமா மாதா அன்பியக் கூட்டம் குடும்ப விழாவாக,ஆலயத்தில் வெகு விமரிசையுடன் கொண்டாடப்பட்டது.
கடந்த 2010ம் ஆண்டில் சகோ.செல்லாஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் சிறு குடும்பங்கள் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்ட அன்பியம் சகோ.மைக்கிள்சன் அவர்கள் ஒருங்கிணைப்பில் 25 குடும்பங்களாக வளர்ச்சி பெற்று, தற்சமயம் சகோ.ரெக்ஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் உயர்வு பெற்று பற்பல ஆன்மீக சமூக மேம்பாட்டுப்பணிகளை மெற்கொண்டு வருகின்றனர்.
பங்குத்தந்தையர்களின் பாராட்டுகள், பக்கத்தில் உள்ள காணிக்கை அன்னை இல்லசகோதரிகளின் பராமரிப்புகள் ஓசூர் சியோன் மலை ஆன்மீக மைய அன்பர்களின் பங்கேற்புகள் ஆகியவற்றின் துணையோடு ஓசூர் சிப்காட் புனித பாத்திமா மாதா அன்பியம் பக்திப்பணியோடு சீடத்துவப்பணியும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
பங்குத்தந்தை அருட்பணி மரிய ஜோசப் அவர்களை பவனியாக அழைத்து வந்து, கும்ப மரியாதையோடு வரவேற்பு செய்திட , திருப்பலி ஆரம்பமாயிற்று. அழகிய சீருடையில் அனைத்துக்குடும்பத்தினரும் அணிவகுத்து வந்திருந்தனர்.
தொடர்ந்து, ஆலய கீழ்த்தள வளாகத்தில், பங்குத்தந்தை தலைமையில் அருட்சகோதரிகள், மூத்த முன்னோடி உறுப்பினர்கள் முன்னிலையில், சிறுவர் சிறுமியர்களின் விவிலிய வினா விடை போட்டிகள், வீர சிலம்பாட்டம், விதவிதமான உள்ளரங்க விளையாட்டுக்கள், ஓவியப் போட்டிகள், கிளாசிக் நடனங்கள் என மனமகிழ் நிகழ்ச்சிகள் களை கட்டின. பங்கேற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெரியோர்களுக்கு சால்வைகள் போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அனைவருக்கும் அருசுவை விருந்து பரிமாறப்பட்டது.
செய்தியாளர்கள்: கொடை ரிடம்டர் மற்றும் கஸ்மீர் ரோச்
© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP