- 17 October, 2025
திருச்சி | அக்டோபர் 15, 2025:
திருச்சி சிந்தாமணியில் 'மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக விடிவெள்ளி சிறப்புப் பள்ளி மாணவர்களுடன் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.
"மாறுவோம் மாற்றுவோம்" அறக்கட்டளை இளவல்களால் நடத்தப்படும் ஒரு அறக்கட்டளை. இதன் மூலம் பல நற்பணிகளை வழிநடத்தி வருகின்றார்கள். சமுதாயத்தின் விளிம்பின், கடை எல்லையில் இருக்கின்றவர்களை இனம் கண்டறிந்து உதவிக்கரம் நீட்டுகின்றார்கள். செல்வி சுதா, இவரோடு இணைந்த பல இளம் உள்ளங்கள் ஒருங்கிணைத்து தங்களது 7ஆம் ஆண்டு தீப ஒளித்திருநாளை மிக விமர்சையாக கொண்டாடினார்கள்.
2025ஆம் ஆண்டிற்கான தீப ஒளித்திருநாளை விடிவெள்ளி சிறப்பு மாணவர்கள், அன்பக இல்ல குழந்தைகள் (திருச்சி) இவர்களோடு இணைந்து குயின் எம்பரர் ஹோட்டல் மற்றும் ரெசார்ட்ஸ் சிந்தாமணி எனுமிடத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து சரியாக 11.00 மணியளவில் சிறப்பு நிகழ்வினை ஆரம்பித்தார்கள்.
விழாவில் கலந்து கொள்ள வருகின்ற ஒவ்வொருவரையும், அன்போடும், கரிசணையோடும், வழிநடத்தி இசையோடு வரவேற்றார்கள். சிறப்பு விருந்தினர்களாக, தோழர் கென்னடி ஜோசப் (வழக்கறிஞர்), திரு எம்.ஆண்டனி ஸ்டீபன், (உதவி பேராசிரியர், சமூக தொழில் முனைவுத்துறை, மெட்ராஸ் சமூகப்பணி கல்லூரி) தோழர் மேரி (மாநிலத் தலைவர், தமிழ்நாடு பெண்கள் இயக்கம்), டாக்டர் கோவிந்த ராஜன் (ஜெயம் மல்டி ஸ்பாஷலிட்டி மருத்துவமனை, திருச்சி) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புச் செய்தார்கள்.
செல்வி சுதா வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களையும், விடிவெள்ளி சிறப்புப் பிள்ளைகள், அன்பக இல்ல குழந்தைகளின் பெற்றோர்களை வரவேற்றார்கள். சகோதரர் ஷெரிப் மேஜிக் செய்து மகிழ்ச்சிப்படுத்தினார். முகில் மற்றும் ஜாலி குழுவினர்கள் நடனம் ஆடி சிறப்பித்தனர். விடிவொள்ளி சிறப்பு மாணவ, மாணவியர்களும் தங்களது கலைத்திறனால் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தினார்கள்.
"மகிழ்வித்து மகிழ்ந்து பார்'' என்ற கூற்று இந்த அறக்கட்டளைக்கு மிகவும் பொருத்தமானது.
செய்தியாளர்: சகோ.மலர்விழி சாந்தி SAT
© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP