image

பல்வேறு கிறிஸ்தவ பிரிவினருடன் கரம் கோர்க்கும் பல்சமய உரையாடல் பணிக்குழு

திருச்சி | அக்டோபர் 18, 2025:


'BLESS TAMILNADU- 2026' என்கிற 7 மணி நேர உபவாச ஜெபக் கூட்டத்திற்கான திட்டமிடல் கூட்டம் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 16) அன்று திருச்சி, TMR ரெசிடென்சியில் நடைபெற்றது. சகோதரர். மோகன் சி. லாசரஸ் அவர்களின் தலைமையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலூர் மண்டலத்தைச் சேர்ந்த அனைத்து சபையின் தலைவர்களும் பங்கேற்றனர். 


இத்திட்டமிடல் கூட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட போதகர்கள் கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசிற்காகவும், வரவிருக்கும் தேர்தலுக்காகவும் ஜெபித்தனர். 


இந்த 07 மணி நேர உபவாச ஜெபத் தொடர் (Fasting Prayer Chain Program) திட்டம், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து வட்டார மையங்களிலும் நடைபெறும். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற அனைவரும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்


தமிழ்நாடு ஆயர் பேரவையின் (TNBC) கிறித்துவ திருச்சபையின் ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல் பணிக்குழுவின் சார்பில், அருட்தந்தை. ஜே. பெனடிக் பர்னபாஸ், சகோதரர். பிரான்சிஸ் பஸ்டின் மற்றும்

சகோதரர். வின்சென்ட் ராஜன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


அன்றைய தினம் சகோதரர். மோகன் சி. லாசரஸ் அவர்களைச் சந்தித்து கிறித்துவ திருச்சபையின் ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல் பணிக்குழு முன்னெடுக்கும் 'தபோர்-2025' கொண்டாட்டத்திற்காக அழைப்பு விடுத்தனர். 


இதுவரை TELC, CSI போன்ற அனைத்து முக்கியத் திருச்சபைகளின் பங்களிப்புடன் தனது செயல்பாடுகளை முன்னெடுத்து வந்த தமிழ்நாடு ஆயர் பேரவையின் (TNBC) கிறித்துவ திருச்சபையின் ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல் பணிக்குழு, இப்போது வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்கள் மாமன்றத்தின் இறுதி ஆவணத்திற்குப் (final synodal document) பிறகு, புதிய பெந்தகோஸ்தே மற்றும் சுயாதீன திருச்சபைகள் மற்றும் தலைவர்களுடன் இணைந்து பயணிப்பதற்காக மேலும் பல புதிய முயற்சிகளையும், புதுமையான திட்டங்களையும் எடுத்து வருகிறது."



செய்தியாளர்: அருட்தந்தை. ஜே. பெனடிக் பர்னபாஸ்

© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP