- 21 October, 2025
அக்டோபர் 19, 2025:
இவர் 1412 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் நாள் போலந்தில் உள்ள கிராகோல் மறைமாவட்டத்தில் ஓஸ்வீசிமுக்கு நகரத்தின் அருகில் உள்ள கென்டி என்ற கிராமத்தில் பக்திமிகு பெற்றோர்களான டனிஸ்லாஸ் அன்னோ தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார். இவர் தத்துவம் மற்றும் இறையியல் அறிவியல் கற்றறிந்து படிப்பில் சிறந்து முன்னேற்றம் அடைந்த இவர் கிராகோல் அகடாமியில் இறையியல் பேராசிரியராக பணிபுரிந்தார் பின்னர் இவர் கிராகோல் மறைமாவட்டத்தின் ஓல்குஸுமில் அருட்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
திருச்சபை பணியின் பெரும் பொறுப்பை கண்டு பயந்து இவர் திருச்சபையை விட்டு விலகினார். அதன் பின்னர் மீண்டும் கிராகோல் அகடாமியில் இணைந்து திருமறை பேராசிரியராக தான் இறக்கும் வரை பணியாற்றினார். அவரது வாழ்வில் பல அற்புதங்களையும் செய்துள்ளார். இவர் மிகுந்த தர்மச் சிந்தனையாளர் ஏழை மக்கள் மேல் மிகவும் இரக்கம் காட்டுபவர். இவரிடம் கற்ற பல ஏழை மாணவர்களுக்கு உதவியுள்ளார் .
இவர் இயேசுவின் திருப்பாடுகளின் மீது மிகவும் பற்றுதல் கொண்டவர் இவர் ரோமாபுரிக்கும் பாலஸ்த்தினத்திற்கும் பலமுறை நடந்து திருயாத்திரையாக சென்றுள்ளார் ஒருமுறை இவர் திருயாத்திரையாக சென்ற பொழுது திருடர்களால் பிடிக்கப்பட்டு அவரிடமிருந்த அனைத்து பொருட்களையும் இவர் இழந்தார் திருடர்கள் சென்ற பின் தனதுசட்டையின் உள் பையில் சில பொற்காசுகள் இருப்பதைக் கண்ட அவர் கொள்ளையர்களைக்கூப்பிட்டு அந்த பொற்காசுகளை அவர்களிடம் கொடுத்தார் இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட கொள்ளையர்கள் தாங்கள் திருடிய அனைத்து பொருட்களையும் அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு அத்திருடர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக மனம் மாறினார்கள்.
தீயை அணைத்த ஜெபம்
ஜான் கான்டியஸ் தனது வாழ்நாளில் பல அற்புதங்களை செய்துள்ளார். ஒருமுறை ஒரு நகரத்தில் தீப்பற்றி எரிவதை கண்டு தீயை அணைக்க ஜெபம் செய்தார் உடனே அத்தீயணைக்கப்பட்டு அங்குள்ள மக்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர் இந்த அற்புதத்தைக் கண்டு பல மக்கள் அவர் பால் நம்பிக்கை கொண்டனர். இறைவனுக்காக தன் வாழ் நாள் முழுவதும் பணி புரிந்து பிறருக்கும் தத்துவ இறையியலை கற்பித்துவந்த இவர் தனது 83 ஆம் வயதில் 1473 ம் ஆண்டு டிசம்பர் காலமானார் இவரது உடல் புனித அனோ கல்லூரி தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது . தற்பொழுது இந்த இடம் ஒரு பிரபல திருயாத்திரை இடமாக மாறி உள்ளது.
செய்தியாளர் : அருள் தயாளன்
© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP