- 21 October, 2025
அக்டோபர் 21, 2025:
இங்கிலாந்தைச் சேர்ந்த உர்சுலா அம்மையார் ,இங்கிலாந்தில் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவ மன்னரின் மகள் இவர் இங்கிலாந்தில் ஒரு பெரிய அருட்சகோதரிகளின் இல்லத்தை ஏற்படுத்தி அதில் பல சகோதரிகளை சேர்த்து அனைத்து சகோதரிகளுக்கும் தாயாராக இருந்து அவர்களை ஜெபத்திலும் புண்ணிய வழியிலும் நடத்தி வந்தார்கள்.
இங்கிலாந்தில் கடவுளை நம்பாத சாக்சன் எனப்படும் கொடூர கலவரக்கார்களால் இங்கிலாந்து கொள்ளையடிக்கப்பட்டது. எனவே இங்கிலாந்து தேசத்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள, தங்கள் தேசத்தை விட்டு கால், ஜெர்மனி, போன்ற நாடுகளுக்கு ஓடிப் போனார்கள். அருட்சகோதரிகளின் இல்லத்தாயார் உர்சுலாவும் தனது இல்ல 11000 சகோதரிகளுடன் இங்கிலாந்து விட்டு ஜெர்மனிக்கு புறப்பட்டுச்சென்ற போது , பல பெண்களும் அவர்களுடன் சென்றனர் அவர்கள் ரைன் நதியின் அருகாமையில் உள்ள கொலோன் நகரை அடைந்து அங்குள்ளமக்களுக்கு இறைப் பணி செய்து வந்தனர்.
ஜெர்மனி தேசத்திலும் கலவரம் ஏற்பட்டதால் பலர் அன்ஸ் எனப்படும் கொடியவர்களால் தாக்கப்பட்டார்கள். கொடியவர்கள் அருட் சகோதரிகள் குடி இருந்த இல்லத்திற்கு சென்று, அவர்களை தீய எண்ணத்திற்கு இணங்க முயற்சித்தனர் ஆனால் அவர்களின் தீய எண்ணத்திற்கு அருட்சகோதரிகள் இணங்க மறுத்ததால் தாயார் உர்சுலாவும் 11000 சகோதரிகளும் கொலை செய்யப்பட்டனர் இச்சகோதரிகள் தங்களின் இரத்தத்தை சிந்தி வேத சாட்சிகளானார்கள்
ஜெபம்
அருள் நிறைந்த மரியே கன்னியர்களின் காவலியே மணிப்பூர் போன்ற இடங்களில் மதவெறியர்களால், கலகக்காரர்களால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாத்து பராமரிக்க உம்மை வேண்டுகிறோம் தாயே - ஆமென்.
செய்தியாளர்: அருள் தயாளன்
© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP