image

மதுக்கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள தூத்துக்குடி போதைநோய் நலப்பணிக்குழு

தூத்துக்குடி | அக்டோபர் 21, 2025:


தூத்துக்குடி ஆயிர் இல்லத்தில் செயல்பட்டு வரும் அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை, போதைநோய் நலப்பணிக்குழுவின் சார்பாக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள மதுக்கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த சனிக்கிழமை (18/10/2025) அன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.


2021 தொடங்கப்பட்டு தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வி.இ சாலையில் அமைந்துள்ள வ உ சி மார்க்கெட் எதிர்புறம் அமைந்துள்ள டாஸ்மாக் கடை எண் 9945-ஐ அகற்றி மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரான உயர்திரு. இளம் பகவத் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.


ஏற்கனவே மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் அறிவுறுத்தலின்படி பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் மதுக்கடைகளை அகற்ற அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வழியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மனு கொடுக்கப்பட்டது. அகில இந்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழு, தலைவர் திரு ப. பாபு அவர்களிடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.


செய்தியாளர்: Catholic Connect Reporter

© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP