- 19 October, 2025
சின்னமலை | அக்டோபர் 19, 2025:
சென்னை மயிலை உயர் மறைமாவட்டம் சின்னமலை திருத்தலத்தில் நேற்று தொடர் ஜெபமாலையும், அன்னையின் திருவுருவ படங்கள் கண்காட்சியும் நடைபெற்றது.
காலை 7:00 மணி முதல் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் இரண்டு அன்பியங்களும், ஒரு பக்த சபையும் இணைந்து ஜெபமாலை, மன்றாட்டு மாலை ஜெபித்தனர்.
இந்த நிகழ்வு புண்ணிய பூமியில் உள்ள 12-ம் சிலுவைப்பாதை நிலையில் நடைபெற்றது. அருகிலுள்ள ஜோசப் அரங்கில் அன்னையின் பல்வேறு எழில் வடிவங்களை சித்தரிக்கும் படங்களின் கண்காட்சி நடைபெற்றது. ஜெபமாலை ஜெபித்த அன்பிய மக்கள் கண்காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.
மாலையில் அருட்தந்தை எக்காளம் ஜேக்கப் அவர்களின் தலைமையில் சிறப்புத் திருப்பலியும், நற்கருணை ஆசீரும்,தொடர்ந்து அன்னையின் ஜெபமாலை வடிவிலான தேர் பவனியும் நடைபெற்றது.
மக்கள் அனைவரும் வரிசையில் வந்து ஜெபமாலை ஜெபித்து தேர்பவனியில் கலந்து கொண்டனர்.
திருத்தல அதிபர் தந்தை அருட்பணி ஜெயக்குமார் அவர்களும், உதவிப் பங்கு தந்தை ஜோசப் அவர்களும் பவனியில் கலந்து கொண்டு ஆசி வழங்கினர்.
பவனியின் முடிவில் அனைவருக்கும் நேர்ச்சை உணவு வழங்கப்பட்டது.
செய்தியாளர் :கஸ்மீர் ரோச்
© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP