image

பூந்தமல்லி பங்கில் ஆசிரியர் தினம், அன்னை மரியாள் பிறப்பு விழா மற்றும் பெண் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

சென்னை, செப்டம்பர் 10, 2026: சென்னை மயிலை உயர்மறை மாவட்டம், பூந்தமல்லியில் உள்ள திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் ஆசிரியர் தினம், அன்னை மரியாளின் பிறந்தநாள் விழா மற்றும் பெண் குழந்தைகள் தின விழா ஆகியவை இணைந்து சிறப்பாகக் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டன.


நிகழ்ச்சியின் தொடக்கமாக வரவேற்பு நடனம் மற்றும் வரவேற்புரை இடம்பெற்றன. தொடர்ந்து பல்வேறு பாடல்கள், குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் மற்றும் அருட்சகோதரிகளின் சிறப்புப் பாடல்கள் நடைபெற்றன.


மேலும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அருட்தந்தை ஜான்சன் OMI அவர்கள் சிறப்புரையாற்றி, விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயனுள்ள மற்றும் ஊக்கமளிக்கும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.


இந்நிகழ்வுக்காக பங்குத்தந்தையர்களான அருட்தந்தை நல்லப்பன் OMI, அருட்தந்தை அந்தோணி OMI மற்றும் அருட்தந்தை பிபியன் OMI ஆகியோர் சிறப்பான முறையில் திட்டமிட்டு ஒருங்கிணைத்திருந்தனர்


ஆலய வளாகத்தில் உள்ள யூஜின் மஹாலில் நடைபெற்ற இந்நிகழ்வு, மகிழ்ச்சியான தருணங்களுடன் சிறப்பாக நிறைவடைந்தது. இறுதியில் பங்கு மக்களுக்காக தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.


இந்த விழா அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அன்பையும், ஒற்றுமையையும் ஏற்படுத்திய ஒரு அழகான நிகழ்வாக அமைந்தது.


பங்குத்தந்தை,

© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP