image

புனித வியாழனன்று 12 உரோமன் அருள்பணியாளர்களின் பாதங்களைக் கழுவும் திருத்தந்தை

வத்திக்கான், ஏப்ரல் 02, 2026: புனித வியாழன் அன்று நடைபெறும் திருப்பலியின் போது, கடந்த ஆண்டு குருத்துவ அருள்பொழிவு பெற்ற பதினொரு பேர் உட்பட மொத்தம் பன்னிரண்டு குருக்களின் பாதங்களைக் திருத்தந்தை லியோ கழுவவுள்ளார்.


புனித வியாழன் அன்று மாலை 5:30 மணிக்கு புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் நடைபெறவுள்ள இந்தத் திருப்பலியில் திருத்தந்தை பன்னிரண்டு குருக்களின் பாதங்களைக் கழுவுவார்.


இவர்களில் பதினொருவருக்கு கடந்த ஆண்டு திருத்தந்தை குருத்துவ அருள்பொழிவு செய்தார், அருள்பணி ரென்சோ சியேசா உரோம் பாப்பிறை குருமடத்தில் ஆன்மீக இயக்குநராகப் பணியாற்றுகிறார். வழிபாட்டின் முடிவில், திருத்தந்தை நற்கருணையை புனித பிரான்சிஸ் சிற்றாலயத்தில் உள்ள நற்கருணை வைப்பிடத்திற்கு பவனியாக எடுத்துச் செல்வார்.


Courtesy: Vatican News

© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP