image

உங்கள் வருங்காலத் துணைவருக்காகத் திரு இருதயத்திற்கு செபம்

ஜூன் 13, 2026: இயேசுவின் திரு இருதயப் பெருவிழா, கிறிஸ்துவின் நம்பிக்கைக்குரிய, தியாகம் நிறைந்த, நிபந்தனையற்ற அன்பை நமக்கு நினைவூட்டுகிறது. திருமண வாழ்க்கையைத் தேடுபவர்களுக்கு, இது தங்களது வருங்கால வாழ்க்கைத் துணையையும், அழைத்தலையும் ஆண்டவரிடம் ஒப்படைக்க ஒரு சிறந்த வாய்ப்பாகும். நாம் ஜெபிக்கும்போது, சரியான நபரை நோக்கி நம்மை வழிநடத்துமாறு மட்டுமன்றி, நம் இதயத்தை அவருடைய திரு இருதயத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்குமாறும் இயேசுவின் திரு இருதயத்திடம் வேண்டுவோம்.


அன்றாட செபம்:

இயேசுவின் திரு இருதயமே, எனது வருங்கால வாழ்க்கைத் துணையை உமது அன்பான பராமரிப்பில் நான் ஒப்படைக்கிறேன்.


அவரை எப்போதும் ஆசீர்வதித்து பாதுகாத்தருளும்.


உம் மீதான நம்பிக்கையிலும், நற்பண்புகளிலும், அன்பிலும் அவர் வளர உதவி செய்யும்.


உமது திருவுளத்தை நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் ஏற்றுக்கொள்ளும் வகையில் எங்கள் இருதயங்களைத் தயாராக்கும்.


உமது திட்டப்படி, சரியான நேரத்தில் நாங்கள் சந்திக்கும்படி வழிநடத்தும்.


நாங்கள் காத்திருக்கும் இந்தக் காலத்தில், உமது திரு இருதயத்தின் நற்பண்புகளான தியாக அன்பு, விட்டுக்கொடுத்தல், மன்னிப்பு, தாழ்ச்சி, பொறுமை மற்றும் இரக்கம் ஆகியவற்றை நாங்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள உதவி செய்யும். அப்போதுதான் நீர் எங்களை நேசிப்பது போல நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்க முடியும்.


உண்மையான நிறைவு என்பது உலகியல் உறவுகளில் அல்ல, முதலில் உம்மிலேயே உள்ளது என்பதை நினைவில் கொள்ள எங்களுக்குக் கற்றுக்கொடும்.


எங்கள் பயணம் எப்போதும் புனிதத்தை நோக்கியும், உம்முடனான நித்திய வாழ்வை நோக்கியும் எங்களை அழைத்துச் செல்லட்டும்.

ஆமென்.


இயேசுவின் திரு இருதயமே, எங்கள் இதயத்தை உமது இதயத்தைப் போல மாற்றும்.

மரியாவின் மாசற்ற இதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித சூசையப்பரின் தூய இதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


நாம் நமது எதிர்காலத்தை திரு இருதயத்திடம் ஒப்படைக்கும்போது, கடவுள் நம் பாதையில் கொண்டு வரும் மனிதர்களுக்கும் வாய்ப்புகளுக்கும் நம்மைத் திறந்து வைப்போம். கத்தோலிக்க கனெக்ட் மேட்ரிமோனி (Catholic Connect Matrimony), இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 4,800-க்கும் மேற்பட்ட கத்தோலிக்கத் திருமணமாகாதவர்களை ஒரு பாதுகாப்பான மற்றும் விசுவாசம் சார்ந்த சூழலில் ஒன்றிணைக்கிறது. சரிபார்க்கப்பட்ட சுயவிவரங்கள், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மதப்பிரிவு, வயது, தொழில், இருப்பிடம், மொழி மற்றும் பிற விருப்பங்களின் அடிப்படையில் தேடல் வசதிகளுடன், அருட்சாதனத் திருமணத்தை நாடும் உண்மையான நபர்களுடன் கத்தோலிக்கர்கள் இணைய இது உதவுகிறது. மேலும் அறிய catholicconnectmatrimony.com என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.


தங்கள் வருங்கால வாழ்க்கைத் துணைக்காகக் காத்திருந்து செபிப்பவர் யாராவது உங்களுக்குத் தெரியுமா? இந்த செபத்தைப் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், அவர்களது பயணத்தை இயேசுவின் திரு இருதயத்திடம் ஒப்படைக்க அவர்களை ஊக்குவியுங்கள்.


மேலும் வாசிக்க:

கத்தோலிக்கர்கள் கத்தோலிக்கர்களையே திருமணம் செய்துகொள்ளுமாறு திருச்சபை ஏன் ஊக்குவிக்கிறது?


புனிதமான திருமணத்தை நோக்கி கத்தோலிக்க இணையர்களை வழிநடத்தும் அன்னை மரியா



- கத்தோலிக்க கனெக்ட் நிருபர்

© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP