image

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்ட நரேஷ் குமார்: கர்தினால் அந்தோணி பூலா வாழ்த்து

ராணிப்பேட்டை, மார்ச் 30, 2026: கடந்த ஜனவரி மாதம் அகில இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தில் ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக புதியதாக நியமிக்கப்பட்ட k. நரேஷ் குமார் அவர்கள் மரியாதை நிமித்தமாகவும் வாழ்த்துத் தெரிவிக்கும் பொருட்டும், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) தலைவரும் ஹைதராபாத் உயர் மறைமாவட்டத்தின் பேராயருமான மேதகு கர்தினால் அந்தோணி பூலா அவர்களை கடந்த மார்ச் 19, வியாழக்கிழமை அன்று சந்தித்தார்.


இந்த சந்திப்பின்போது நரேஷ் குமார் அவர்கள் தாம் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கம் (TCYM) மற்றும் இந்திய கத்தோலிக்க இளைஞர் இயக்கம் (ICYM) ஆகியவற்றின் மூலம் பெற்ற அனுபவங்களையும், அது அரசியல் துறையில் எவ்வாறு பயனுள்ளதாக அமைந்தது என்றும் பகிர்ந்துகொண்டார்.


சந்திப்பு நடைபெற்றபோது, இளைஞர்களின் சமூகப் பணியிலும் அரசியல் பங்களிப்பிலும் கத்தோலிக்க திருஅவை ஏற்படுத்திய பாதிப்பினை தன் வாழ்வில் ஆழமாக உணர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


கர்தினால் அவர்கள் நரேஷ் குமார் அவர்களுக்கு "இந்த இளம் வயதில் கத்தோலிக்க திருஅவையின் வாயிலாக கிடைத்த இளைஞர் இயக்கத்தின் அனுபவங்களை சரியாக பயன்படுத்தி அரசியலில் முக்கிய பதவியை பெற்றிருப்பதில் கத்தோலிக்க திருஅவை பெருமை கொள்கிறது" என்று வாழ்த்து தெரிவித்தார்.


இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக புதியதாக நியமிக்கப்பட்ட கர்தினால் அந்தோணி பூலா அவர்களுக்கும் நரேஷ் குமார் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது வேலூர் மறைமாவட்டத்தின் திருவண்ணாமலை மறைவட்ட முதன்மை தந்தை பேரருட்திரு லூர்துசாமி அவர்களும் உடன் இருந்தார்கள்.


- Catholic Connect Reporter


© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP