image

தினம் ஒரு தகவல்: பன்னிரண்டு நாள் கிறிஸ்துமஸ்

டிசம்பர் 24, 2025:

பன்னிரண்டு நாள் கிறிஸ்துமஸ் ஐரோப்பிய நாடுகளில் இடைப்பட்ட (மத்திய) காலத்தில் தொடங்கப்பட்டது. டிசம்பர் 25-ம் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி வரை 12 நாட்கள் தொடர்ந்து வரும். இந்த நாட்களில் ஒரு சில புனிதர்களின் விழாவும், பாரம்பரிய விழாக்களும் கொண்டாடப்படும். முந்தைய காலத்தில் திருவருகைக் காலமானது கிறிஸ்துமஸ் விழாவின் முந்தைய ஞாயிறு தொடங்கும். கிறிஸ்துமஸ் காலம் திருக்காட்சி திருவிழாவோடு நிறைவடையும். தற்பொழுது திருச்சபையானது நான்கு திருவருகை வாரங்களை நமக்கு கொடுத்திருக்கிறது.


25-ம் தேதி : கிறிஸ்துமஸ் பெருவிழா. இயேசு இவ்வுலகில் மனிதராக பிறந்தார் என்பதை உலக மகிழ்ச்சியோடு கொண்டாடும் விழா.

26-ம் தேதி : "போஸ்சின் டே என்று அழைப்பார்கள். கிறிஸ்துமஸ் நாளை தொடர்ந்து வரும் நாள் இது. இந்நாளில் பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்வர். திருச்சபையானது புனித ஸ்தேவான் திருவிழாவை கொண்டாடும் நாள் இது. இவர் இயேசுவுக்காக உயிர்நீத்த முதல் மறைசாட்சி.

27-ம் தேதி : புனித யோவான் திருவிழா. இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் ஒருவர் இவர். இயேசுவின் பணிவாழ்வில் அவரோடு இணைந்து இருந்தவர்.

28-ம் தேதி : மாசில்லா குழந்தைகள் திருவிழா. ஏரோதுவின்

கடினமான உள்ளத்தின் காரணமாக படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளை திருச்சபையானது வாஞ்சையோடு நினைவு கூறுகின்றது.

29-ம் தேதி : புனித தாமஸ் பெக்கட் (1170) விழாவை சிறப்பு செய்கிறது. இவர் 12-ம் நூற்றாண்டில்

திருச்சபையின் அதிகாரத்தோடு விளையாடி கொண்டிருந்த அரசனை எதிர்த்த காரணத்தால்

கொலை செய்யப்பட்டவர்.

30-ம் தேதி : புனித எக்வின் நினைவு விழா

31-ம் தேதி : திருத்தந்தை முதலாம் சில்வெஸ்டர் (375) நினைவு விழா. புத்தாண்டின் முந்தைய மாலை

விழா தொடக்க நாளாக சிறப்பிக்கப்பட்டது.

1-ம் தேதி : புத்தாண்டு கொண்டாட்டம். கத்தோலிக்க திருச்சபை யானது அன்னை மரியாவை இறைவனின் தாய் என்று விழா கொண்டாடி, புதிய ஆண்டை மரியாவின் பொறுப்பில் ஒப்படைத்து மகிழும் நாள் இது.

2-ம் தியதி : புனித பெரிய பேசில் மற்றும் புனித கிரகோரியார்

விழா

3-ம் தேதி : இயேசுவின் புனித பெயர் திருவிழா. மக்களை பாவங்களிலிருந்து மீட்க இயேசு இவ்வுலகில் பிறந்தார். "அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்" (மத் 1:21). உலக மக்கள் மீட்படைய கொடுக்கப்பட்ட பெயர் இயேசு.

4-ம் தேதி : புனித எலிசபெத்தின் நினைவு விழா. இவர் அமெரிக்க நாட்டின் முதல் புனிதை.

5-ம் தேதி : திருக்காட்சி விழாவிற்காக தயாரிக்கும் நாள். மூன்று ஞானிகள், யூதர்களின் அரசன் பிறந்திருக்கிறார் என்று விண்மீன் வாயிலாக கண்டு கொண்டு, பல நூறு மைல்களை தாண்டி வந்து வணங்கிய நாள் இது. திருச்சபையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட விழா.


இந்நாள்களின் இறுதி நாளன்று, மக்கள் கேக் வெட்டி விழாவை உச்சக்கட்ட மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள். குடும்பங்களிலும், நண்பர்கள் மத்தியிலும் உற்சாகம் கரை புரண்டு ஓடும். கிறிஸ்துமஸ் விழா மகிழ்ச்சியின் விழா என்று நாமும் உற்சாகத்தோடு கொண்டாடுவோம்.


-அருள்பணி . குலசை பெலிக்ஸ்

ஆன்மீக இயக்குநர், குட் நியூஸ் தியான இல்லம், நாங்குநேரி

© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP