- 06 April, 2026
சின்னமலை, சென்னை | செப்டம்பர் 24, 2025:
சென்னை மயிலை உயர் மறைமாவட்டம் சின்னமலை தூய ஆரோக்கிய அன்னை மற்றும் திருத்தூதர் தோமா திருத்தலத்தில் விவிலிய ஞாயிறு சிறப்புடன் நடைபெற்றது.
கண்காட்சி அரங்குகள் திருத்தல அதிபர் ஜோசப் ஜெயக்குமார் அவர்களால் காலை சிறப்பு திருப்பலி நிறைவில் மந்திரிக்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது.
1விவிலிய சட்ட நூல்கள் அரங்கு - திருமுழுக்கு ஆயத்த நிலையினர்,
2. வரலாற்று நூல்கள் அரங்கு - பரிந்துரை குழுவினர்,
3. ஞான நூல்கள் அரங்கு - கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம்,
4. இறைவாக்கினர் அரங்கு - ஆங்கில இளையோர்,
5.நற்செய்தியாளர்கள் அரங்கு - மரியாயின் சேனை பெண்கள்,
6. புனித பவுல் திருமுகங்கள் - ஆங்கில மறைக்கல்வி மாணவர்,
7.பொது திருமுகங்கள் - மரியாயின் சேனை ஆண்கள்,
8.ஏதேன் தோட்டம், தானியேல் குகை - மரியாயின் சேனை இளையோர்,
9.திருத்தூதர் தோமையார் வரலாறு - சின்னமலை - வின்சென்ட் தே பவுல்,
10.உவமைகள், அற்புதங்கள் அரங்கு - தமிழ் மறைக்கல்வி மாணவர்,
11. விவிலிய கண்காட்சி அரங்கு - தோமையார் இளைஞர் குழுவினர். என
பார்வையாளர்கள் அனைவருக்கும் அரங்குகளை நிர்வகித்த பக்த சபையினர் விவரித்தனர்.
மாலையில் விவிலியப் பயணம் என்ற தலைப்பில் விவிலிய தேர்பவனி நடைபெற்றது. சிறுவர்கள் அனைத்து விவிலிய நூல்களின் பெயர்களைத் தாங்கிய காகித கிரீடப் பட்டை அணிந்து பவனியில் நடந்து வந்தனர்.
மாலை திருப்பலியை அருள்பணி உபால்டஸ் சுந்தர் அவர்கள் நிறைவேற்றினார்கள்.நிறைவில் கலைநிகழச்சிகள், விவிலிய வில்லுப்பாட்டு, விவிலிய கதாபாத்திரங்களில் மறைக்கல்வி மாணவர் அழகு நடை நடந்து வந்து மகிழ்வளித்தனர்.
நிகழ்வுகளை உதவி பங்குதந்தை ஜோசப் லூயிஸ் மற்றும் அருட்சகோதரர் கிறிஸ்டோபர் திறம்பட ஒழுங்கு படுத்தினர்.
செய்தியாளர்: கஸ்மீர் ரோச்
© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP